• Thu. Mar 26th, 2026

24×7 Live News

Apdin News

பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க சிபிஎம் தீவிரமாகப் போராடும்- பெ.சண்முகம்

Byadmin

Mar 26, 2026


தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையின்போது, 5 தொகுதிகளுக்கு சம்மதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

பின்னர், முதல்வரே கூறியதால் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை ஏற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“எங்களுக்கு இடங்களின் எண்ணிக்கையை விட சித்தாந்தமே முக்கியம்”!

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் குறைந்த இடங்களில் போட்டியிட்டாலும், பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க சிபிஐ(எம்) தீவிரமாகப் போராடும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



By admin