• Fri. Jan 10th, 2025

24×7 Live News

Apdin News

பாடகர் ஜெயச்சந்திரன்: காலத்தால் அழியாத, தனித்து விளங்கும் 15 பாடல்கள்

Byadmin

Jan 10, 2025


 பி. ஜெயச்சந்திரன்

பட மூலாதாரம், @pinarayivijayan

படக்குறிப்பு, பி. ஜெயச்சந்திரன்

50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலும் மலையாளத்திலும் அற்புதமான திரைப்படப் பாடல்களைப் பாடிய பி. ஜெயச்சந்திரன் காலமானார். தமிழில் அவர் பாடிய 15 பாடல்களின் பட்டியல் இது.

எர்ணாகுளத்தின் இரவிபுரம் பகுதியில் புகழ்பெற்ற இசைக்கலைஞரான திருப்புனித்துரா ரவிவர்மா கொச்சனியன் தம்புரானுக்கும் சுபத்திரா குஞ்சம்மாவுக்கும் பிறந்தவர் ஜெயச்சந்திரன்.

ஆறு வயதிலேயே மிருதங்கம் வாசிக்கப் பயின்ற ஜெயச்சந்திரன், எட்டு வயதில் கிறித்தவ தேவாலயங்களில் பக்திப் பாடல்கள் பாடத் தொடங்கினார்.

1960களின் பிற்பகுதியில் மலையாளப் படங்களில் பாட ஆரம்பித்தார். 1972ல் வெளிவந்த பணிதீராத வீடு படத்தில் அவர் பாடிய ‘நீலகிரியூடே’ பாடலுக்காக கேரள மாநில விருது கிடைத்தது.

By admin