• Thu. Apr 23rd, 2026

24×7 Live News

Apdin News

பாடகி ஜானகியின் 10 பிரபல பாடல்கள் எவை?

Byadmin

Apr 23, 2026


ஜானகி

பட மூலாதாரம், FB/Janaki

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகி, தனது 17வது வயதில் சலபதிராவ் இயக்கத்தில் வெளியான ‘விதியின் விளையாட்டு’ (1957) என்ற படத்திற்காக ‘பெண் என் ஆசை பாழானது’ என்ற முதல் சினிமா பாடலை பாடினார்.

அடுத்த நாளே அவருக்கு ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 1957ம் ஆண்டு மட்டும் 5 மொழிகளில் பல பாடல்களை பாடியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு கொங்கணி, துளு, சவுராஷ்டிரா, இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடியுள்ள ஜானகிக்கு ஏப்ரல் 23 அன்று பிறந்த நாள்.

சுபஸ்ரீதணிகாசலம்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, சுபஸ்ரீ தணிகாசலம்

‘ஜானகி பாடல்கள் குறித்து மாதக்கணக்கில் பேசலாம்’

எஸ்.ஜானகி பாடல்களில் உங்களுக்கு பிடித்த 10 பாடல்களை சொல்ல முடியுமா என்று ராகமாலிகா டிவி என்ற இசை சேனல் மூலம் பிரபலமானவரும், இசை ஆய்வாளருமான சுபஸ்ரீ தணிகாசலத்திடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

“அவர் பாடல்களை பற்றி நாட்கணக்கில், மாதக்கணக்கில் பேசலாம். அவரின் சாதனைகள் அப்படிப்பட்டது.” என்ற சொல்லத்தொடங்கிய அவர் தன் மனதுக்கு நெருக்கமான ஜானகியின் 10 பிரபல பாடல்கள் குறித்து பேசினார்.

By admin