நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, இரண்டு நாட்களும் விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி போயா விடுமுறை என்பதால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.