• Mon. Mar 3rd, 2025

24×7 Live News

Apdin News

பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஸாஹிராவை எதிர்த்தாடுகிறது ஏறாவூர் அலிகார் ம.க.

Byadmin

Mar 2, 2025


லங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் 20 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் தேசிய சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியும் கொழும்பு மருதானை ஸாஹிரா கல்லூரியும் விளையாடவுள்ளன.

இந்த இறுதிப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று வியாழக்கிழமை (27) இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

அலிகார் அணிக்கு என்.எம். முன்சிப் தலைவராகவும் ஸாஹிரா அணிக்கு முபாஸல் ஸியார்ட்  தலைவராகவும் விளையாடுகின்றனர்.

இந்த இரண்டு அணிகளிலும் சில வீரர்கள் சில வருடங்களாக தொடர்ந்து விளையாடிவருவதால் இறுதிப் போட்டி இரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமையும் என நம்பப்படுகிறது.

இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக சிட்டி லீக் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (25) அரை இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் கொழும்பு, ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியை எதிர்கொண்ட ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

போட்டியின் 43ஆவது நிமிடத்தில் சுமார் 40 யார் தூரத்திலிருந்து ப்றீ கிக் மூலம் ஏறாவூர் அலிகார் அணி வீரர் மொஹமத் முன்சிப் போட்ட அற்புதமான கோல் அனைவரையும் பிரமிக்க வைத்தது.

முன்சிப் தனது இடது காலால் உதைத்து போட்ட இந்த மின்னல் வேக கோல் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட வரலாற்றில் போடப்பட்ட அதிசிறந்த கோல் என போட்டியைக் கண்டுகளித்த இலங்கையின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் பலர் கூறினர்.

அலிகார் மத்திய கல்லூரி அணியில் இடம்பெறும் வீரர்களில் ஐவர் கனிஷ்ட தேசிய அணியில் இடம்பெற்ற  அனுபவசாலிகள் ஆவர். அவர்கள் ஐவர் உட்பட ஏனைய வீரர்கள் தமது அணியின் வெற்றிகக்காக கடுமையாக முயற்சிக்கவுள்ளனர்.

இதேவேளை, பாடசாலைகள் கால்பந்தாட்டத்தில் பிரசித்திபெற்ற மருதானை ஸாஹிரா கல்லூரி அணியை வீழ்த்தி ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி அணி வரலாறு படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கால்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவித்தனர்.

பெனல்டி முறையில் ஸாஹிரா வெற்றி

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் புனித சூசையப்பர் கல்லூரி அணியை 4 – 2 என்ற பெனல்டி முறையில் ஸாஹிரா கல்லூரி அணி வெற்றி கொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகதிபெற்றது.

முழு நேரத்தின் போது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலை போட்டிருந்தன.

போட்டியின் 63ஆவது நிமிடத்தில் புனித சூசையப்பர் அணி சார்பாக ஹரிஷும் 86ஆவது நிமிடத்தில் ஸாஹிரா வீரர் எம்.எம்.எம்; சுஹெய்பும் தலா ஒரு கோலை போட்டனர்.

போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து மத்தியஸ்தரினால அமுல்படுத்தப்பட்ட பெனல்டி முறையில் 4 – 2 என ஸாஹிரா வெற்றிபெற்றது.

அணிகள்

ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி: மொஹமத் முன்சிப் (தலைவர்), எம்.டி.எம். சாஹி, எம்.எஸ்.எம். அல் பாதிக், ஐ.எம். தில்ஹாம், என்.எம். முனாஸ், ஏ.எம். அத்திப், எம்.எஸ்.எம். மஹ்தி, எம். சகீப், கே. எம். முக்மில், எம்.என். மஹ்ருஸ், எம்.எஸ்.எம். அப்ரித், ஐ. முக்சித் அஹ்மத், எம்.எம். நசீம், எம்.எச். இபாத், எம்.ஆர். சரப், என். அல் அப்சால், என். இல்ஹால், எம்.என்.எம். முஷ்தாக். பயிற்றுநர்: எம்.எம். முகைதீன்.

ஸாஹிரா கல்லூரி: முபஸ்ஸல் ஸியார்ட் (தலைவர்), பறீக் அஹ்மத் (உதவித் தலைவர்), அஹ்மத் ஷரீப், எம்.என்.எம். அப்துல்லா, எம்.ஆர்.எம். ஷக்கீப், எம்.எம்.எம். ஷுஹெய்ப், அக்கீல் ஆனிஸ், என்.எம். அக்கீன், எம்.எவ்.எம். பறிக், எம்.எஸ்.எம். ஷய்ல், கே.எம். கதீம், ரஷீத் ஷபீன், எவ்.எம். பாதில், அப்துல் அஸீஸ், என்.எம். நஜாத், எப்.எஸ். உஸ்மான், ஆக்கில் அமானுல்லா, எச்.எம். பாதிஹ், ஜே.எம். சதீர், எம்.கே. ஹிப்னி, அப்துர் ரஹ்மான், ஷஹித் ஹுசெய்ன், எம்.எம். முஸ்தாக். பயிற்றுநர்: எம். இம்ரான்.

By admin