• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

பாடசாலைக்குள் மாணவனின் தாக்குதலுக்கு இலக்காகி ஆசிரியர் காயம்!

Byadmin

Oct 2, 2025


மொனராகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனின் தாக்குதலுக்குள்ளாகி ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (01) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் மொனராலை ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு சென்றுள்ளார்.

பாடசாலையில் உள்ள ஆசிரியர் ஒருவர் இது தொடர்பில் குறித்த மாணவனிடம் கேள்வி கேட்டுள்ளார். கோபமடைந்த மாணவன், ஆசிரியரை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin