• Wed. Oct 2nd, 2024

24×7 Live News

Apdin News

பாடசாலைக்கு வெளியே ஆசிட் வீச்சு; 14 வயது சிறுமி படுகாயம்

Byadmin

Oct 2, 2024


மேற்கு லண்டனில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு வெளியே வைத்து ஆசிட் வீசப்பட்டமையால் 14 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளார்.

அத்துடன், மற்றொரு மாணவன் மற்றும் பெண் ஊழியர் ஒருவரும் ஆசிட் அமிலத்தன்மையால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

16 வயது மாணவன் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுக்காக வைத்தியசாலையில் தொடரந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

27 வயதுடைய பெண் ஊழியர் தாக்குதலில் உள்ளான காயங்களுக்கு சிகிச்சை பெற்று வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

எனினும், 14 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

By admin