• Sun. Oct 5th, 2025

24×7 Live News

Apdin News

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இலத்திரனியல் சிகரட்டுகள் விற்பனை

Byadmin

Oct 5, 2025


மொனராகலை தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு, மொனராகலை நகரில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இலத்திரனியல் சிகரட்டு மோசடியை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் பல்வேறு தொகைகளுக்கு மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்துவந்ததாக, முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து இலத்திரனியல் சிகரட்டுகள் மற்றும் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபர் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இலத்திரனியல் சிகரட்டுகள் விற்பனை appeared first on Vanakkam London.

By admin