• Tue. Oct 28th, 2025

24×7 Live News

Apdin News

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விபச்சார விடுதி | மூவர் கைது!

Byadmin

Oct 26, 2025


ஹெரணை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று பெண்கள் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மூன்று பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் மசாஜ் நிலையத்தின் பெண் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு , மாத்தறை மற்றும் நிட்டம்புளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூன்று பெண்களும் 32 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களும் இந்த மசாஜ் நிலையத்திற்கு அடிக்கடி வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த மசாஜ் நிலையம் இயங்கி வந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

By admin