0
‘ சு ஃப்ரம் சோ’ எனும் திரைப்படத்தின் மூலம் டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பிரபலமான பான் இந்திய நடிகர் ராஜ் பி. ஷெட்டி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு, ‘ஜுகாரி கிராஸ்’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் குரு தத்த கனிகா என்பவரது இயக்கத்தில் உருவாகும் ‘ஜுகாரி கிராஸ்’ எனும் படத்தில் நடிகர் ராஜ் பி. ஷெட்டி முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரான பூர்ண சந்திர தேஜஸ்வி எழுதி இருக்கும் ‘ஜுகாரி கிராஸ்’ எனும் புதினத்தை தழுவி இந்த திரைப்படம் உருவாகிறது. அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சச்சின் பஸ்ரூர் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை குருதத்த கனிகா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதனிடையே இயக்குநரும், தயாரிப்பாளருமான குருதத்த கனிகா இயக்கத்தில் உருவாகும் ‘கரவளி’ எனும் திரைப்படத்தில் ராஜ் பி. ஷெட்டி கதையின் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும், இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.