• Wed. Oct 9th, 2024

24×7 Live News

Apdin News

பாபி ஷகியா: மார்பகங்கள், எலும்பு மற்றும் தோலில் 4 முறை புற்றுநோய் தாக்கி மீண்ட பெண் கூறுவது என்ன?

Byadmin

Oct 9, 2024


காணொளிக் குறிப்பு, பாபி ஷகியா நான்கு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர்

‘மார்பக புற்றுநோயால் என் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர முடியவில்லை’ – புற்றுநோயை வென்ற பெண் கூறியது என்ன?

பாபி ஷகியாவிற்கு மார்பக புற்றுநோய் இருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்ட போது அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து ஒன்பது மாதங்களே ஆகியிருந்தன. ஆனால் மார்பக புற்றுநோயுடன் போராடினால் கூட, முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் குழந்தைகளை வளர்ப்பது சாத்தியம் தான் என்பதை அவரது கதை நிரூபிக்கிறது.

பாபி ஷகியா மார்பகங்கள், எலும்பு மற்றும் தோலில் நான்கு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர்.

அவருக்கு 27 வயதில் முதல்முறையாக மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டது. 2022இல், உலகளவில் 2.3 மில்லியன் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவிக்கிறது.

முழு விவரம் காணொளியில்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

By admin