• Tue. Aug 4th, 2026

24×7 Live News

Apdin News

பாப் மான்ட்கோமெரி: ஆஸ்திரேலியாவின் குறுக்கே 5,300 கி.மீ. சைக்கிள் பயண சவாலை நிறைவு செய்த மறுநாளே உயிரிழந்த 82 வயது நபர்

Byadmin

Aug 4, 2026


5,300 கி.மீ. சைக்கிள் பயண சவாலை நிறைவு செய்த மறுநாளே உயிரிழந்த 82 வயது நபர்

பட மூலாதாரம், Instagram/broome2bowral.4mnd

படக்குறிப்பு, பாப் மான்ட்கோமெரி தனது பேரனுடன்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்டும் நோக்கில் ஆஸ்திரேலியாவில் 3,300 மைல்கள் (5,300 கி.மீ.) சைக்கிளில் பயணம் செய்த 82 வயதான பாப் மான்ட்கோமெரி, தனது சவாலை நிறைவு செய்த மறுநாளே உயிரிழந்தார்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் புரூம் நகரில் இருந்து சிட்னியின் தென்மேற்கே உள்ள போவ்ரல் நகரம் வரை அவர் மேற்கொண்ட இந்த ஆறு வாரப் பயணத்திற்கு “ஒன் லாஸ்ட் ரைட்” என்று பெயரிட்டிருந்தார்.

அவரது மரணம் “எதிர்பாராதது” என்றாலும், “அமைதியானதாக” இருந்ததாக அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பயணத்தின் மூலம், பாப் மான்ட்கோமெரியும் அவரது 18 வயது பேரனுமான டாம் மால்கமும் இணைந்து, மோட்டார் நியூரோன் நோய் (எம்.என்.டி) தொடர்பான தொண்டு நிறுவனத்திற்காக சுமார் 1.05 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களை (சுமார் 74,000 அமெரிக்க டாலர்) திரட்டியிருந்தனர்.

மோட்டார் நியூரோன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் எம்.என்.டி. என்.எஸ்.டபிள்யூ. அமைப்புக்காக பாப் மேற்கொண்ட ஆறாவது நிதி திரட்டும் சைக்கிள் பயணம் இதுவாகும். இந்த நோய் தொடர்பான பிரச்னை அவருக்கு மிகவும் தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

By admin