• Sun. Jun 1st, 2025

24×7 Live News

Apdin News

பாமக: ராமதாஸ் தனது மகன் அன்புமணி மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன? முழு விவரம்

Byadmin

May 29, 2025


பாமக, ராமதாஸ் - அன்புமணி

பட மூலாதாரம், X/GK Mani

படக்குறிப்பு, அன்புமணி மற்றும் ராமதாஸ் (பழைய படம்)

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் மற்றும் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பொதுவெளியில் மீண்டும் பகிரங்கமாக இன்று வெடித்துள்ளது. சமீபத்தில் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், கட்சியின் வளர்ச்சிக்கு அன்புமணி தடையாக இருக்கிறார் என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தைலாபுரத்தில் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி மீது இதுவரை இல்லாத வகையில் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும், கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று காலில் விழுந்து அழுதார் அன்புமணி என ராமதாஸ் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

‘பாஜகவுடன் கூட்டணி வைக்குமாறு வற்புறுத்திய அன்புமணி’

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறி தன் கைப்படவே கடிதம் எழுதி, அன்புமணியிடம் கொடுத்தாக ராமதாஸ் கூறினார்.

By admin