ராமேசுவரம்: பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாலம் மற்றும் கப்பல்கள் அதை கடந்து செல்லும் வகையில் நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ராமேசுவரம் அடுத்த பாம்பனில் பழைய ரயில் பாலத்தின் நடுவே உள்ள தூக்குப் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதன் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. பிரதமர் மோடி கடந்த 2019-ல் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
ரூ.550 கோடி செலவில் 2.08 கி.மீ. நீளத்துக்கு இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத் துக்கு 99 தூண்கள் அமைக்கப்பட் டுள்ளன. இப்பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக நாட்டிலேயே முதல்முறையாக செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை திறந்துவைப்பதற் காக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார். முன்னதாக, இலங்கையில் 3 நாள் அரசுமுறை பயணத்தை நிறைவு செய்த அவர், அனுராதபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் ஹெலிபேட் தளத்தில் நேற்று நண் பகல் 12 மணி அளவில் வந்திறங்கினார். பின்னர், காரில் பாம்பன் சாலைப் பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு சென்று. பாம்பன் புதிய ரயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து, புதிய பாலத்தில் மண்டபம் பாம்பன் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், பாலத்தின் நடுவே உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தின் இயக் கத்தை தொடங்கி வைத்த பிரதமர், அதன் வழியாக கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் கடந்து செல்வதை பார்வையிட்டார். ஸ்ரீராமநவமியை முன்னிட்டு, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயி லில் பிரதமர் வழிபாடு நடத்தினார். பின்னர், ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பாம் பன் பால திறப்புவிழா கூட்டத்தில், ராமேசுவரம் – தாம்பரம் தினசரி விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
ரூ.8,300 கோடி மதிப்பில் வாலாஜா பேட்டை-ராணிப்பேட்டை, விழுப்புரம் புதுச்சேரி, பூண்டியன்குப்பம் -சட்டநாதபுரம், சோழபுரம் – தஞ்சாவூர் இடையிலான நான்குவழி சாலைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிறைவடைந்த பல்வேறு செங்குத்து தூக்குப் பாலம் மேலே உயர்த்தப்பட்டதும், அதன் வழியாக கடலோர காவல்படையின் கப்பல் கடந்து செல்வதை பார்வையிட்ட பிரதமர் மோடி. பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் முதலாவது செங்குத்து தூக்குப் பாலம், ராமேசுவரத்தில் அமைந்துள்ளது. இதனால், வணிகம், சுற்றுலா மேம்படும். கடந்த 10ஆண்டுக ளில்ரயில், சாலை, விமான நிலையம், துறைமுகங்கள், மின்னாற்றல், எரி வாயு குழாய்கள் போன்ற கட்டமைப் புக்கான நிதி ஒதுக்கீட்டை 6 மடங்கு உயர்த்தி உள்ளோம். ‘வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் தமிழகத் துக்கும் பெரிய பங்கு உள்ளது.
தமிழகத்துக்கு 3 மடங்கு அதிக நிதி: முன்பிருந்த மத்திய அரசைவிட கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிக நிதியை தற்போதைய மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. தமிழக ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் 7 மடங்கு அதிக நிதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொருளாதாரம், தொழில் துறை வளர்ச்சிக்கு இது அதிக அளவில் உதவி புரிந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 77 ரயில் நிலையங்கள் நவீனப் படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் உதவி யோடு தமிழகத்தில் 4,000 கி.மீ.க்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனை செய்தும்கூட சிலர் அழுது கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு அதுதான் தெரியும்.
கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவ தும் உள்ள 4 கோடி ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கிடைத்துள்ளன. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் தமி ழகத்தில் 12 லட்சத்துக்கும் அதிகமான கான்கிரீட் வீடுகள், ஏழை மக்களுக்கு கிடைத்துள்ளன. தமிழகத்தில் 1.11 கோடி குடும்பங்கள் உட்பட நாடு முழுவதும் கிராமங்களில் 12 கோடி குடும்பங்களுக்கு முதல்முறையாக குழாய் வழியாக குடிநீர் வழங்கப் பட்டுள்ளது.
‘தமிழில் கையெழுத்திடுங்கள்’ – தமிழக தலைவர்கள் பலர் எனக்கு கடிதம் அனுப்புகின்றனர். ஆனால், அதில் அவர்கள் தமிழில் கையெழுத் திடுவது இல்லை. குறைந்தபட்சம் கையெழுத்தாவது தமிழில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். மருத்துவ கல்வியை தமிழில் வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு பிரதமர் பேசினார். விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி.க் கள் நவாஸ்கனி, தர்மர், பாஜக சட்டப் பேரவைகுழு தலைவர் நயினார் நாகேந் திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.