• Sun. Apr 6th, 2025

24×7 Live News

Apdin News

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் கீழே கப்பல் வரும் போது எவ்வாறு வழி கிடைக்கும்?

Byadmin

Apr 5, 2025


பாம்பன் புதிய ரயில் பாலம், ராம நவமி, மோதி, பழைய தூக்குப் பாலம்
படக்குறிப்பு, கடல் நடுவே புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதன் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் முடிவடைந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து, பாலத்தின் மீது பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு சான்றிதழ் வழங்கியதை அடுத்து நாளை (ஏப்ரல் 6-ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.

பாம்பன் பாலத்தின் வரலாறு

இந்திய நாட்டின் நிலப்பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனுக்கும் மண்டபத்திற்கும் கடலில் ரயில் பாலம் கட்ட ஆங்கிலேய அரசு நூறாண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டது.

ரயில் பாலத்திற்கு கீழே கப்பல் கடந்து செல்ல வசதியாக தூக்குப் பாலம் கட்டுவது என்றும், தனுஷ்கோடிக்கும் இலங்கை தலைமன்னாருக்கும் சிறு கப்பல் போக்குவரத்து நடத்துவதென்றும் கி.பி.1911இல் ஆங்கிலேய அரசு ஒப்புதல் அளித்து பணிகள் தொடங்கப்பட்டன.

By admin