• Mon. Mar 31st, 2025

24×7 Live News

Apdin News

பாம்புகள் கோடையில் வீடுகளை நோக்கி படையெடுப்பது ஏன்? அதனை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Byadmin

Mar 29, 2025


கோடையில் வீடுகளை நோக்கி படையெடுக்கும் பாம்புகள்

பட மூலாதாரம், Getty Images

”நான் இன்று மட்டும் 5 பாம்புகளைப் பிடித்துள்ளேன். நான் பிடித்ததில் கண்ணாடி விரியன் மற்றும் நாகப்பாம்பு ஆகியவை விஷமுள்ளவை. ஒரு வகை பச்சைப்பாம்பு, ஆபத்தில்லாத நஞ்சுடையது. மற்ற இரண்டும் நஞ்சில்லாத பாம்புகள். என்னைப் போலவே, கோவையில் இருக்கும் பாம்பு பிடிப்பவர்கள் சிலர் 4 அல்லது 5 பாம்புகளைப் பிடித்திருக்கின்றனர். இது வழக்கத்தை விட விட சற்று அதிகம்தான்”

கோவையில் 27 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் பணியை மேற்கொண்டு வரும் அமீன் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல் இது.

பொதுவாக கோடை காலங்களில் வீடுகளை நோக்கி பாம்புகள் அதிகளவில் படையெடுக்கும் என்ற கருத்துக்கு பாம்பு பிடிப்பவர்கள் சொல்லும் தகவல்கள் மேலும் வலு சேர்க்கின்றன. ஆனால் கோடை காலங்களில் பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி அதிகமாக வருவதாக எந்த புள்ளி விவரமும் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பாம்புகள் வந்தால் வனத்துறை அல்லது தீயணைப்புத் துறைக்கு தகவல் தர வேண்டுமென்பதையும் வலியுறுத்துகின்றனர்.

By admin