• Sat. Dec 20th, 2025

24×7 Live News

Apdin News

‘பாம்பு கடிக்க வைத்து கொலை’: தந்தையின் காப்பீடு பணத்தைப் பெறுவதற்கு மகன்கள் செய்த செயல்

Byadmin

Dec 20, 2025


திருவள்ளூர், தந்தை கொலை, பாம்பு கடித்துக் கொலை

பட மூலாதாரம், Thiruvallur District Police

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)

காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக தந்தையின் கழுத்தில் பாம்பு கடிக்க வைத்துக் கொன்றதாகக் கூறி இரு மகன்கள் உள்பட ஆறு பேரை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை டிசம்பர் 19-ஆம் தேதி கைது செய்துள்ளது.

மரணம் தொடர்பாக காப்பீடு நிறுவனம் எழுப்பிய சந்தேகம் காரணமாகவே வழக்கின் உண்மைத்தன்மை வெளியில் வந்ததாகக் கூறுகிறார், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா.

“தந்தையின் பெயரில் இருந்த சுமார் மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமான காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக இப்படியொரு கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்,” என்கிறார் அவர். இந்த வழக்கில் மகன்கள் கைதானது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் பொதத்தூர்பேட்டை கிராமம் அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் தேதியன்று இங்கு வசிக்கும் 56 வயதான கணேசன் என்பவர் பாம்புக் கடியால் உயிரிழந்தார்.

By admin