• Fri. Feb 20th, 2026

24×7 Live News

Apdin News

பாம்பு கடித்து இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பல ஆயிரம் பேர் பலியாக என்ன காரணம்?

Byadmin

Feb 20, 2026


ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 இந்தியர்கள் பாம்புக்கடியால் இறக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 இந்தியர்கள் பாம்புக்கடியால் இறக்கின்றனர். இது உலகளவில் ஏற்படும் இறப்புகளில் பாதி.

தேவேந்திரா என்பவர் ஒரு இந்திய விவசாயி.

மல்பெரி இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பாம்பு தன் காலில் பற்களைப் பதித்த அந்தத் தருணத்தை அவர் இப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்.

“பாம்பு கடித்த நான்கு நாட்களுக்குப் பிறகு, வலி தாங்க முடியாததாக மாறியபோது தான் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். தாமதமாகச் சென்றதால் எனது காலை இழக்க நேரிட்டது,” என்று உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு (Global Snakebite Taskforce – GST) வெளியிட்டுள்ள ஒரு குறும்படத்தில் அவர் கூறுகிறார்.

ஆனால் உயிர் பிழைத்த சில அதிர்ஷ்டசாலிகளில் தேவேந்திராவும் ஒருவர். மத்திய அரசின் கூற்றுப்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 பேர் பாம்புக்கடியால் உயிர் இழக்கின்றனர். இது உலகெங்கிலும் ஏற்படும் இறப்புகளில் பாதியாகும்.

சில மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.

By admin