• Sat. Oct 12th, 2024

24×7 Live News

Apdin News

பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்: இஸ்ரோ விண்வெளியில் நிறுவும் இந்த மையம் எப்போது தயாராகும்? என்ன செய்யும்?

Byadmin

Oct 12, 2024


இந்திய விண்வெளி மையம்: இஸ்ரோ விண்வெளியில் ஆய்வகம் அமைப்பது எதற்காக? அதில் என்ன செய்யும்?

பட மூலாதாரம், ISRO

  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனப்படும் இந்திய விண்வெளி மையத்தை இஸ்ரோ 2035ஆம் ஆண்டு நிறுவத் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போதே நடைபெற்று வருகின்றன.

இந்த மையத்தின் முதல் பாகம் 2028ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் தெரிவித்திருந்தார். இதற்காக அமைச்சரவையின் அதிகாரபூர்வ ஒப்புதல் கடந்த மாதம் வழங்கப்பட்டது.

முதல் பாகம் விண்ணில் செலுத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் கழித்து இந்தியா தனது விண்வெளி மையத்தை முழுமையாக இயக்கத் தயாராக இருக்கும்.

கடந்த 1984ஆம் ஆண்டு சோவியத் நாட்டு ராக்கெட்டில், இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா விண்வெளி சென்றிருந்தார். அதன் பிறகு இந்தியர்கள் விண்வெளிக்குச் செல்லவில்லை.

By admin