• Tue. Feb 3rd, 2026

24×7 Live News

Apdin News

பார்ன்ஸ்லி – இங்கிலாந்தின் முதல் AI தொழில்நுட்ப நகரமாக அறிவிப்பு

Byadmin

Feb 3, 2026


இங்கிலாந்தில் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சியாக பார்ன்ஸ்லி (Barnsley) நகரம் நாட்டின் முதல் AI தொழில்நுட்ப நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், AI பயிற்சி கருவிகள் சோதனை செய்யப்படுவதுடன், நகர மக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் இலவச AI மற்றும் டிஜிட்டல் திறன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், NHS மருத்துவ சேவைகளில் விரைவான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை செயல்முறைகளை மேம்படுத்த AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முயற்சிக்கு மைக்ரோசாப்ட் மற்றும் சிஸ்கோ போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதரவு வழங்க உறுதியளித்துள்ளன.

அதேவேளை, பார்ன்ஸ்லியில் அறிமுகப்படுத்தப்படும் கல்வி திட்டங்கள் மற்றும் புதிய முயற்சிகள், எதிர்காலத்தில் இங்கிலாந்து முழுவதும் AI வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை விரிவுபடுத்த வழிகாட்டியாக இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

By admin