காணொளி: பாலத்தீனத்திற்கு ஆதரவாக பிரபலங்கள் வீடியோ வெளியீடு
பாலத்தீனத்திற்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டனர். மலாலா, பில்லி எல்லீஷ், ஜோக்வின் ஃபீனிக்ஸ், பெனலாப்பி க்ரஸ் ஆகியோர் உள்ளனர்.
பிரிட்டிஷ் நடிகர் ஸ்டீவ் கூகன் கூறுகையில், “இதை இப்போது பேசுவது முக்கியம். எல்லாம் முடிந்த பின் அல்ல.” என்றார்.
செப்.17ல் லண்டனில் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, ‘டூகெதர் ஃபார் பாலஸ்டைன் ஃபண்ட்’ இந்த வீடியோவை வெளியிட்டது.
காஸாவில் ‘பாலத்தீன அமைப்புகளுக்கு’ இதன் மூலம் 1.6 மில்லியன் பவுண்ட் நிதி திரட்டப்பட்டதாக அதன் இணையதளம் கூறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு