• Sat. Aug 2nd, 2025

24×7 Live News

Apdin News

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க 15 நாடுகள் கூட்டறிக்கை!

Byadmin

Aug 2, 2025


பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என 15 நாடுகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா சார்ந்த வெளிநாட்டு அமைச்சர்கள் மாநாட்டில், ஸ்பெயின், நோர்வே மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் உட்பட 15 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

“பாலஸ்தீனத்திற்கு அரசியல் அங்கீகாரம் வழங்குவதே நீண்டகால சமாதானத்திற்கு வழிவகுக்கும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

அத்துடன், “இந்த முயற்சியில் இன்னும் பல நாடுகள் இணைய வேண்டும். பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும்” என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள் – பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க இங்கிலாந்து விருப்பம்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக கனடாவும் அங்கீகரிக்கிறது!

அண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும், “பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க நேரம் வந்துவிட்டது” எனக் கூறியிருந்தார்.

இதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இருந்தபோதிலும், பாலஸ்தீன விவகாரத்தில் பிரான்ஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதுடன், தன்னுடைய நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

மேற்படி 15 நாடுகளின் பன்னாட்டு ஆதரவு முயற்சி, மத்திய கிழக்கில் நிலவும் பாலஸ்தீன-இஸ்ரேல் முரண்பாட்டில் புதிய பரிமாணத்தை உருவாக்கக்கூடியதாகவும் பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க இங்கிலாந்தும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin