0
பாலஸ்தீன வட்டாரத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க கனடா திட்டமிடுகிறது.
சில நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அது சாத்தியமாகலாம் என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி கூறினார்.
பாலஸ்தீன நிர்வாகம் அதன் அடிப்படைக் கட்டமைப்பைச் சீரமைக்க வேண்டும், ஹமாஸ் குழுவின் பங்கேற்பு இல்லாமல் அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அவர் முன்வைத்துள்ளார்.
தொடர்புடைய செய்தி : பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க இங்கிலாந்து விருப்பம்!
அண்மை நாள்களில் பாலஸ்தீன வட்டாரத்தைத் தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக G7 தொழில்வள நாடுகள் அறிவிக்கின்றன.
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து தற்போது கனடாவும் மேற்படி அறிவிக்கிறது.