• Tue. Jan 21st, 2025

24×7 Live News

Apdin News

பாலஸ்தீன ஆதரவு பேரணி; மத்திய இலண்டனில் 70க்கும் மேற்பட்டோர் கைது!

Byadmin

Jan 21, 2025


பாலஸ்தீன ஒற்றுமை பிரச்சார குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு, மத்திய இலண்டனில் சனிக்கிழமையன்று நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் சுமார் 77 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

நண்பகலில் பேரணி தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அதிகாரிகள் ஒரு பெண்ணை தரையில் தடுத்து நிறுத்துவதைக் கண்டு, வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கானவர்களில் சிலர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் பொது ஒழுங்கை மீறியதற்காகவும், இரண்டு பேர் போராட்டத்திற்கு முன்னதாக ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை மீறியதற்காகவும் கைது செய்யப்பட்டதாக பேர்மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விதிமுறைகளை மீற வேண்டாம் என எதிர்ப்பாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததுடன், இரவு 8 மணியளவில், நிபந்தனைகளை மீறியதாக சந்தேகத்தின் பேரில் 70க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

By admin