• Sun. Aug 3rd, 2025

24×7 Live News

Apdin News

பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை, ரூ 5 லட்சம் அபராதம்

Byadmin

Aug 2, 2025


பிரஜ்வால் ரேவண்ணா

பட மூலாதாரம், X/Prajwal Revanna

படக்குறிப்பு, இந்த வழக்கில், அரசு தரப்பு 1632 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தது (கோப்பு புகைப்படம்)

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகெளடாவின் பேரனும், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு பிரஜ்வால் ரேவண்ணா மீது நான்கு பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நான்கு வழக்குகளில் முதலாவது வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் இன்று (2025 ஆகஸ்ட் 2, வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்தது.

பிரஜ்வால் ரேவண்ணாவின் வீட்டில் வேலை செய்து வந்த 48 வயது பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை என நிரூபிக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், கூடுதல் நகர சிவில் மற்றும் அமர்வு நீதிபதி சந்தோஷ் கஜனனா பட் இந்த தீர்ப்பை வழங்கினார்.

By admin