பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
54 வயது நடிகர் சயிஃப் அலி கானை அவரது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர் 6 முறை கத்தியால் குத்தியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (16) அதிகாலை இடம்பெற்றது.
தொடர்புடைய செய்தி – பாலிவுட் பிரபல நடிகர் சய்ஃப் அலி கான் மீது 6 முறை கத்திகுத்து!
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சயிஃப் கான் குணமடைவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவருடைய வீட்டில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டார். தடுத்து வைக்கப்பட்ட அந்நபர், நடிகரின் வீட்டிற்குள் நுழைந்தவரா என்பது தெரியவில்லை.
எனினும், கண்காணிப்புக் கேமரா பதிவிலிருந்து ஒரு பகுதியை பொலிஸார் வெளியிட்டனர். அதில் நடிகர் சயிஃப் கானின் வீட்டிலிருந்து சந்தேகநபர் தப்பியோடியது தெரிந்தது.
அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபரை, இந்தியாவின் சட்டிஸ்கர் மாநிலக் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று நம்பப்படும் அந்த இரண்டாவது நபர், ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்ததாக மும்பை பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மும்பை வீட்டில் கொள்ளை முயற்சி நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
The post பாலிவுட் நடிகர் கத்திக்குத்து சம்பவத்தில் இருவருக்கு தடுப்புக்காவல் appeared first on Vanakkam London.