• Mon. Aug 4th, 2025

24×7 Live News

Apdin News

பாலுறவுக்கான சட்டப்பூர்வ சம்மத வயதைக் குறைக்க வேண்டுமா? சட்டங்கள் காதலை பிரிக்கிறதா?

Byadmin

Aug 4, 2025


உடலுறவுக்கான சட்டப்பூர்வ சம்மத வயது, சட்டம், நீதிமன்றங்கள், பதின்பருவத்தினர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஜூலை மாத இறுதியில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், இந்தியாவில் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது (தற்போது 18 வயது) குறித்து உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இந்த விஷயத்தின் மூலம், பதின்பருவத்தினருக்கு இடையிலான பாலியல் உறவுகளை ஒரு குற்றமாகக் கருதுவது குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்தது.

16 முதல் 18 வயதுக்குட்பட்ட பதின்பருவத்தினருக்கு இடையேயான சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுகள், சுரண்டல் அல்லது வன்கொடுமைகள் அல்ல என்று ஜெய்சிங் கூறுகிறார். இதுபோன்ற வழக்குகள் குற்றவியல் வழக்குகளின் வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

“வயது அடிப்படையிலான சட்டங்களின் குறிக்கோள், குழந்தைகளை சுரண்டலில் இருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும், ஒருமித்த மற்றும் வயதுக்கு ஏற்ற உறவுகளை குற்றமாக்குவதாக இருக்கக்கூடாது” என்று அவர்கள் தங்கள் எழுத்துப்பூர்வ வாதங்களில் தெரிவித்தனர்.

By admin