• Sun. Mar 8th, 2026

24×7 Live News

Apdin News

பால்பன்: இந்தியாவில் ஒரு அடிமை சதிகளை முறியடித்து டெல்லி சுல்தானான வரலாறு

Byadmin

Mar 8, 2026


கியாசுதீன் பால்பன்

பட மூலாதாரம், NCERT

படக்குறிப்பு, கியாசுதீன் பால்பன் 1246 முதல் 1287 வரையிலான நாற்பது ஆண்டு காலம் தனது அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தினார்.

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி ஹிந்தி
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

இல்துத்மிஷின் இளைய மகன் நசிருதீன் முகமது டெல்லி அரியணையில் ஏறியவுடனேயே டெல்லி சுல்தானகத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை மீண்டும் வரத் தொடங்கியது, இதில் சுல்தான் முகமதுவுக்கு பெரிய பங்கு எதுவும் இருக்கவில்லை.

முகமதுவின் ஆட்சிக் காலத்தில் அதிகப்படியான அதிகாரம் இருந்த மிக முக்கியமான அமைச்சரான கியாசுதீன் பால்பன்தான் இந்த வேலையைச் செய்தது.

பால்பன் 1246 முதல் 1287 வரையிலான நாற்பது ஆண்டுகளில் முதல் இரண்டு தசாப்தங்கள் சுல்தானின் பிரதிநிதியாகவும், அடுத்த இரண்டு தசாப்தங்கள் டெல்லி சுல்தானாகவும் இந்த அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தினார்.

அதிகாரத்தைப் பெறுவதற்கான அவரது பயணத்தில் இரண்டு ஆண்டுகள் தடை ஏற்பட்டது, அப்போது அவர் தனது அரசியல் எதிரிகளின் சூழ்ச்சிகளால் சுமார் இரண்டு ஆண்டுகள் அதிகாரத்திலிருந்து விலகி இருந்தார்.

பால்பன் காலத்தின் சாட்சியாக இருந்த வரலாற்றாசிரியர் ஜியாவுதீன் பரனி தனது ‘தாரிக்-ஏ-ஃபிரோஸ்ஷாஹி’ புத்தகத்தில்,”நசிருதீன் முகமது அரியணை ஏறியபோது அவருக்கு வயது வெறும் 17 தான். அவரிடம் ஆட்சி செய்வதற்கான எந்தப் பண்பும் இருக்கவில்லை, ஆர்வமும் இல்லை. அவர் ஆட்சியின் முழுப் பொறுப்பையும் பால்பனிடம் விட்டுவிட்டார்,” என எழுதியுள்ளார்.

By admin