• Mon. Nov 3rd, 2025

24×7 Live News

Apdin News

பிகாரில் சிதிலமடைந்த மசூதியை பராமரிக்கும் இந்துக்கள்

Byadmin

Nov 2, 2025


காணொளிக் குறிப்பு, பிகாரில் சிதிலமடைந்த மசூதியை பராமரிக்கும் இந்துக்கள்

காணொளி: பிகாரில் சிதிலமடைந்த மசூதியை பராமரிக்கும் இந்துக்கள்

பிகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தின் மாடி கிராமத்தில் உள்ள மசூதி பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது. இந்த கிராமத்தில் முஸ்லிம் பரவலாக வசிக்காத நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்துக்கள் இணைந்து நூற்றாண்டுகள் பழமையான அந்த மசூதியை பராமரித்து வருகின்றனர்.

நோவாகாலி கலவரத்திற்குப் பிறகு, பிகாரிலும் பரவலான வன்முறை ஏற்பட்டது. அதில் மகத் பகுதியும் ஒன்று. பாட்னா, கயா, ஷேக்புரா மற்றும் நாளந்தா போன்ற மாவட்டங்களில் முஸ்லிம் மக்கள் தொகை இல்லாத பல கிராமங்கள் உள்ளன. ஆனால் மசூதிகள் இன்னும் அங்கேயே உள்ளன. சில அழிக்கப்பட்டுள்ளன, சில ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆனால் சில இந்துக்களால் பாதுகாக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளன.

நாளந்தாவின் கைலா கிராமத்திலும் முஸ்லிம்கள் யாரும் இல்லை. ஆனால் இங்குள்ள மசூதியை சைக்கிள் பஞ்சர் பார்க்கும் முகமது இஸ்மாயில் கவனித்துக்கொள்கிறார். அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனது பூர்வீக கிராமத்தை விட்டு வெளியேறி, இந்த மசூதிக்குள் தனியாக வசித்து வருகிறார், தினமும் பாங்கு சொல்லி தொழுது வருகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



By admin