சென்னை: சென்னை மாநகரில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் ‘இளஞ் சிவப்பு ஆட்டோக்கள்’ (பிங்க் ஆட்டோக்கள்) வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக 100 பயனாளிகளுக்கு, கடந்த 8-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆட்டோக்களை வழங்கினார்.
2-ம் கட்டமாக தற்போது விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்ற, சென்னையை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சென்னை மாவட்ட சமூகநல அலுவலர், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை -600001 என்ற முகவரிக்கு வரும் ஏப்.6-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.