• Thu. Jan 16th, 2025

24×7 Live News

Apdin News

பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: அறிவிக்கப்படவுள்ள பரிந்துரைப் பட்டியல்

Byadmin

Jan 16, 2025


பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது.

பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக வழங்கப்படவுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டுக்காக வழங்கப்படவுள்ள விருதுகளின் பரிந்துரைப் பட்டியல் இன்று (ஜன. 16) வெளியாக உள்ளது. 2024ஆம் ஆண்டில் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்புகளை மதிக்கும் விதமாகவும், விளையாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து பெண்களின் சாதனைகளையும் கொண்டாடும் விதமாகவும் இந்த விருது வழங்கப்படுகிறது.

பிபிசியின் இந்திய மொழி இணையதளங்கள் அல்லது பிபிசி ஸ்போர்ட் இணையதளத்தில், இந்த ஆண்டின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கு நீங்கள் வாக்களிக்கலாம்.

பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர் குழு, ஐந்து இந்திய விளையாட்டு வீராங்கனைகள் கொண்ட இறுதிப் பட்டியலைத் தொகுத்துள்ளது.

By admin