• Wed. Jul 29th, 2026

24×7 Live News

Apdin News

பிரகாசம்: கோவையில் காணாமல் போன மகனை 23 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப்பில் சந்தித்த தாய்

Byadmin

Jul 29, 2026


கோவை, தமிழ்நாடு, பஞ்சாப், தொலைந்து போன மகனைச் சந்தித்த தாய்
படக்குறிப்பு, தாயுடன் பிரகாசம்

    • எழுதியவர், ஹர்மன்தீப் சிங்
    • பதவி, செய்தியாளர், பிபிசி பஞ்சாபி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

”என் பையனைக் காணவில்லை என்று வருஷக்கணக்கில் தேடித்தேடி அழுதுகொண்டிருந்தேன். நான் வணங்கிய கடவுள் எனக்கு அவனைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அவன் காலில் சங்கிலியைக் கட்டி கொடுமைப்படுத்தப்பட்ட காட்சிகளைப் பார்த்தபோது என்னால் சாப்பிட முடியவில்லை. தூக்கமே வரவில்லை. இப்போது அவனை 23 ஆண்டுகள் கழித்து பார்க்கப்போவதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது.”

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையில் பல ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டு காப்பகத்திலுள்ள தன் மகனை முறைப்படி மீட்டுக் கொண்டு வருவதற்காக தாய் சுந்தரி, கடந்த ஜூலை 25 அன்று காலையில் ரயிலில் புறப்பட்டபோது கோவை ரயில் சந்திப்பில் பிபிசியிடம் பகிர்ந்த வார்த்தைகள் இவை.

சுந்தரி மேற்கொண்ட பயணம், வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. அவருடைய மகன் கிடைப்பதற்கு உதவிய முத்தையா என்பவரின் துணையுடன் பஞ்சாப்பிற்கு, ரயிலில் பயணத்தை மேற்கொண்ட சுந்தரி, ஜூலை 28 அன்று அவருடைய மகனை 23 ஆண்டுகளுக்குப் பின் பார்த்து ஆரத்தழுவி ஆனந்தக்கண்ணீர் சிந்தி, தன் கைகளால் உணவு ஊட்டி மகிழ்ந்திருக்கிறார்.

கோவை, தமிழ்நாடு, பஞ்சாப், தொலைந்து போன மகனைச் சந்தித்த தாய்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, பிரகாசம்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரியும், அவருடைய கணவர் ராமமூர்த்தியும் தங்களுடைய 2 மகன்களுடன் 40 ஆண்டுகளுக்கு முன்பு, பிழைப்புக்காக கோவைக்கு வந்துள்ளனர். கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி பகுதியில் அவர்கள் முதலில் குடியிருந்துள்ளனர்.

பிபிசியிடம் சுந்தரி பகிர்ந்த தகவலின்படி, மூத்த மகன் பிரகாசம், 4 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. கடந்த 2003-ஆம் ஆண்டில் அவருக்கு 16 வயதாகும்போது, அவருக்கும் தம்பிக்கும் இடையில் இரு சக்கர வாகனத்தை யார் பயன்படுத்துவது என்பதில் ஏற்பட்ட சண்டையில், கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதற்கும் பயனில்லை.

By admin