• Thu. Apr 3rd, 2025

24×7 Live News

Apdin News

பிரதமர் மோடி வருகையால் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை! | Fishermen banned from going to sea for 3 days due to PM Modi’s visit

Byadmin

Apr 2, 2025


ராமேஸ்வரம்: பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு வருகை தருவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஏப்ரல் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ம் தேதி ராமேசுவரம் வருகை தர உள்ளார். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஏப்ரல் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் கடலுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாம்பன் மன்னார் வளைகுடா மற்றும் பாம்பன் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை பாம்பன் குந்துக்கால் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்துமாறும் மீன்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.



By admin