• Tue. Jun 17th, 2025

24×7 Live News

Apdin News

பிரதமர் மோதியின் கனடா பயணத்திற்கு எதிராக சீக்கிய அமைப்புகள் போராட்டம் – முழு பின்னணி என்ன?

Byadmin

Jun 17, 2025


பிரதமர் மோதி, கனடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் மோதி ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சைப்ரஸில் இருப்பார், பின்னர் கனடாவுக்குச் செல்வார்

கனடா பிரதமர் மார்க் கார்னியிடமிருந்து ஜி-7 உச்சிமாநாட்டிற்கான அழைப்பு வந்த ஒரு வாரத்தில் பிரதமர் நரேந்திர மோதி கனடாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பிரதமர் மோடி கனடா புறப்பட்டுச் செல்வதற்கு முன்னரே, சில சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. கனடா வரக் கோரி பிரதமர் மோதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, சனிக்கிழமையன்று ஒட்டாவாவில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த சிலர் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்தினர்.

ஆனால், இந்தியப் பிரதமரின் இந்தப் பயணம் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

By admin