பட மூலாதாரம், Getty Images
(இது புதிய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி வருகிறார். ஆனால் பிரதமரின் உரை எதைப்பற்றியது என்கிற தகவல்கள் வெளியிடப்படவில்லை. நவராத்திரி தொடங்குவதற்கு ஒருநாள் முன்பாக மோதியின் உரை இடம்பெறுகிறது.
பிரதமர் பேசுவது என்ன?
- நாளை முதல் நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் நாள் முதல் சுயசார்பு பாரதத்தை நோக்கி நாடு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறது.
- அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர் திருத்தங்கள் நாளை முதல் அமல்படுத்தப்படுகின்றன
- இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்தும், வணிகத்தை எளிமைப்படுத்தும், முதலீட்டை ஈர்க்கும். வளர்ச்சிக்கான வேகத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பங்களிப்பை வழங்கும்.
- நாம் என்ன பொருட்களை வாங்கினாலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். இது இந்திய மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
- சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் அனைத்து மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும்.