• Sat. Sep 20th, 2025

24×7 Live News

Apdin News

‘பிரதமர் வந்தால் இப்படி செய்வீர்களா?’ – திமுகவுக்கு எதிராக கேள்வி எழுப்பிய விஜய்

Byadmin

Sep 20, 2025


காணொளிக் குறிப்பு, ‘பிரதமர் வந்தால் இப்படி செய்வீர்களா?’ – திமுகவுக்கு கேள்வி எழுப்பிய விஜய்

‘பிரதமர் வந்தால் இப்படி செய்வீர்களா?’ – திமுகவுக்கு எதிராக கேள்வி எழுப்பிய விஜய்

தவெக தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக நாகை மாவட்டம் புத்தூரில் அண்ணா சிலை அருகே மக்களிடம் உரையாற்றினார். தவெகவிற்கு மட்டும் பல தடைகள் விதிக்கப்படுவதாக விஜய் குற்றம்சாட்டினார்.

“நாம் செல்கின்ற இடத்தில் எல்லாம் நேரம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். நான் பேசுவதே 3 நிமிடம் தான். அதிலும் அதை பேசக்கூடாது, இதை பேசக்கூடாது எனக் கூறினால் நான் என்ன தான் பேசுவது. நம் கூட்டத்தில் மின் தடை ஏற்படுகிறது, மைக் வேலை செய்யவில்லை. ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவரோ, பிரதமர் மோதியோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ வருகின்றபோது இந்த மாதிரி பவர் கட் அல்லது வயர் கட் நடக்குமா?”

“நமக்கு நடப்பதைப் போன்ற கட்டுப்பாடுகளை அவர்களுக்கு விதிப்பார்களா? முதல்வரிடம் நேரடியாகவே கேட்கிறேன், மிரட்டிப் பார்கிறீர்களா? அதற்கு இந்த விஜய் ஆள் இல்லை, எங்கள் இயக்கமும் அதற்கு ஆள் இல்லை. மக்களைச் சந்திக்க ஏன் இத்தனை தடை விதிக்கிறீர்கள்?” என விஜய் கேள்வி எழுப்பினார்.

ஆளும் கட்சிதான் மின்சாரத்தை துண்டித்ததாக விஜய் கூறும் நிலையில், இதனை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க இயலவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin