2
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71 ஆகும்.
அவர் நேற்று தமது வீட்டில் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமது தனித்துவமான சிரிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் மதன் பாப்.
அவர் கமல்ஹாசன், விஜய், சூர்யா போன்ற பிரபலங்களுடன் ‘தெனாலி’, ஃபிரண்ட்ஸ், காவலன், மழை, தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், வில்லன் மற்றும் யூத் போன்ற பல பிரபல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவரது இயற்பெயர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகும்.
ஏ.ஆர்.ரகுமானின் குரு, தூர்தர்ஷன் டிவின் முதல் இசை கலைஞர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர்.
இசையமைப்பாளர், காமெடி ஷோ நடுவர், குணச்சித்திர நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல், சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.