0
பிரபல ரெப்பாடகர் மாதவ பிரசாத், ‘மதுவா’ என்பவருக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கில், கஹதுடுவ பொலிஸார் மற்றுமொரு பிரபல ரெப் பாடகரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஒரு சட்டத்தiணி மூலம் சரணடைந்த பின்னர், கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பொலிஸ் சோதனையின் போது மாதவ பிரசாத் வெடிபொருட்களுடன் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இதன் மூலம் பல வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலி துப்பாக்கி வைத்திருந்ததற்காக, பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’ முன்னர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.