0
பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘ஸ்பிரிட்’ எனும் திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ ஆகிய படங்களை இயக்கி இந்திய அளவில் முன்னணி நட்சத்திர இயக்குநராக உயர்ந்த சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்பிரிட்’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ், திரிப்தி டிம்ரி, பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ராஜ் தோட்டா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர இசையமைக்கிறார். கொமர்சல் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் காயம் பட்டு சிகிச்சை பெற்று வரும் கதையின் நாயகனும், அவரை இயல்பான பழக்க வழக்கங்களுக்கு திரும்ப உதவும் வகையில் நாயகியும் தோன்றுவது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. பிரபாஸின் சர்வதேச ரசிகர்களிடத்தில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிக அளவில் ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் மாண்டரீன், கொரியன், ஜப்பானீஸ் ஆகிய சர்வதேச மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.