1
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள Louvre அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்படவுள்ளதாக ராய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் Louvre அருங்காட்சியகத்தில் மேலும் 100 வெளிப்புறக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
Louvre அருங்காட்சியகத்தில் 102 மில்லியன் டொலர்க்கு மேல் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்துப் பாதுகாப்புப் பலப்படுத்தப்படுகிறது.
அத்துடன், பொலிஸாருடனான ஒத்துழைப்பும் அதிகரிக்கப்படும் என்று அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அருங்காட்சியகத்தின் வளாகத்தில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
கடந்த மாதம் 19ஆம் திகதி நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 4 சந்தேகநபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
தொடர்புடைய செய்தி : பிரான்ஸ் அரச நகைகள் கொள்ளை; இருவர் கைது; விலையுயர்ந்த நகைகள் இடமாற்றம்!
கொள்ளை நடந்த பிறகு அருங்காட்சியகத்தின் வெளிப்புறச் சுவர்களில் போதிய பாதுகாப்புக் கேமராக்கள் இல்லை என்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
அருங்காட்சியகத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.