0
பிரான்ஸ், தென்மேற்குப் பகுதியில் காட்டுத்தீ மூண்டுள்ளது. இதில் 7 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தக் காட்டுத்தீயில் 11,000 ஹெக்டர் நிலம் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலில் Ribaute நகரில் காட்டுத்தீ தொடங்கியுள்ளது. இது வேகமாகப் பரவியுள்ளது.
மேலும் 20 கிலோமீட்டர் தூரத்தில் வேறொரு காட்டுத் தீச்சம்பவமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரான்ஸுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
காட்டுத்தீ தொடர்ந்து பரவிவருவதை அதிகாரிகள் கவனித்துள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.
அதைக் கட்டுப்படுத்தத் தேசிய அளவிலான வளங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.