• Mon. Oct 6th, 2025

24×7 Live News

Apdin News

பிரான்ஸில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்ட பின்னர், பிரதமர் திடீர் இராஜினாமா!

Byadmin

Oct 6, 2025


பிரான்ஸில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்ட பின்னர், அந்நாட்டின் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு திடீர் இராஜினாமா செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கடந்த மாதமே பிரான்ஸின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அவரை, ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிரதமராக நியமித்தார்.

இந்நிலையில்தான், புதிய அமைச்சரவை நேற்று அறிவிக்கப்பட்டது. அமைச்சரவையில் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது அரசியலில் விமர்சனத்தை ஏற்படுத்தியதாகத் தெரிய வருகிறது.

பிரான்ஸின் பொதுக்கடன் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கிறது. ஜடிபியில் கடன் விகிதத்தில் கிரீஸ், இத்தாலிக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றத்தில் பிரான்ஸில்தான் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

முந்தைய அரசாங்கங்கள் கடந்த மூன்று ஆண்டு பட்ஜெட்டுகளை வாக்கெடுப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றின. இது அரசியலமைப்பால் அனுமதிக்கப்பட்ட ஒரு முறையாகும். இருந்த போதிலும், எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

செபஸ்டியன் லெகோர்னு, பட்ஜெட் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin