• Sun. Mar 30th, 2025

24×7 Live News

Apdin News

பிரிட்டனில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த இரு பெண் உளவாளிகளை கண்டுபிடித்த பிபிசி – எப்படி?

Byadmin

Mar 27, 2025


ரஷ்யா, உளவு

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, குவெடெலினா ஜென்சேவா மற்றும் ஸ்வேதன்கா டோன்சேவா

பிரிட்டனில் செயல்படும் ரஷ்ய உளவு நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இருந்த இரண்டு பெண்களின் பெயர்கள் பிபிசி நடத்திய புலனாய்வில் முதல் முறையாக வெளிவந்துள்ளன.

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த குவெடெலினா ஜென்சேவா, ஸ்வேதன்கா டோன்சேவா ஆகியோர் உளவு நெட்வொர்க்கின் மூலம் மக்களைக் கண்காணித்து தகவல்களைச் சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்க இந்த இரண்டு பெண்களை பிபிசி அணுகியபோது, அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.

குவெடெலினா ஜென்சேவா ஒரு விமான நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரை செல்போன் மூலம் பிபிசி தொடர்புகொள்ள முயன்றபோது அவர் அழைப்பிற்குப் பதிலளிக்கவில்லை. பின்னர் அவரை கடிதம் மூலம் தொடர்புகொள்ள முயன்றபோது, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று மட்டும் கூறினார்.

By admin