• Tue. Mar 24th, 2026

24×7 Live News

Apdin News

பிரிட்டிஷ் அணுஆயுத ரகசியங்களை சோவியத்துக்கு விற்ற உளவாளிகள் சிக்கியது எப்படி?

Byadmin

Mar 24, 2026


ஹெலன், பீட்டர் குரோகர், பிரிட்டன் - சோவியத் ஒன்றியம், அணுஆயுத ரகசியங்கள்

பட மூலாதாரம், Alamy

போர்ட்லேண்ட் உளவு வளையத்தின் விசாரணை 13 மார்ச் 1961 அன்று தொடங்கியது. உளவு, திருமணத்தை மீறிய உறவு, பேயோட்டுதல் மற்றும் ஏமாற்றத்தக்க சாதாரண தோற்றம் கொண்ட ஒரு பங்களா பற்றிய பனிப்போர் காலக் கதையை பிபிசி செய்தியாக்கியது.

பனிப்போர் காலத்து உளவாளி பரிமாற்றம் என்றாலே விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் ஒரு பாழடைந்த சோதனைச் சாவடி அல்லது பாலத்தின் இரு பக்கங்களிலிருந்தும் மெதுவாக நடந்து வரும் காட்சிதான் தோன்றும். ஆனால் 1969-இல் சோவியத் ஒன்றியத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பிரிட்டிஷ் விரிவுரையாளருக்குப் பதிலாக ஹெலன் மற்றும் பீட்டர் குரோகர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போது, அது ஒரு வித்தியாசமான கதையாக இருந்தது.

போலந்து நோக்கி செல்லும் விமானத்தில் அவர்களுக்கு அருகில் நின்றபடி பிபிசியின் டாம் மாங்கோல்ட், “இன்னும் ஒரு மணிநேரத்திற்குள், அவர்கள் எந்த கம்யூனிச மண்ணுக்காகப் பொய் சொல்லி, உளவு பார்த்து, ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்தார்களோ, அங்கு கால் பதிப்பார்கள். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு: பிபிசி தொலைக்காட்சி செய்திகளுக்காக முதலில் ஒதுக்கப்பட்டிருந்த இந்த முதல் வகுப்பு இருக்கைகளில் அமர்ந்து, குரோகர் தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் சுட்ட சால்மன் மீன், முட்டை, கோழி இறைச்சி, ஷாம்பெயின் மற்றும் காபியை அனுபவிக்கிறார்கள்,” என்று கூறினார்.

1961-ஆம் ஆண்டில், அந்த சகாப்தத்தின் மிக முக்கியமான உளவு நடவடிக்கைகளில் ஒன்றான, ஐந்து பேர் கொண்ட போர்ட்லேண்ட் உளவு வளையத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்காக இந்தக் தம்பதியினர் தண்டிக்கப்பட்டனர்.

இந்தத் தம்பதியினர் மிகவும் புத்திசாலித்தனமான தகவல் தொடர்பு அமைப்பைப் பயன்படுத்திப் பிரிட்டிஷ் உளவுத்துறையின் மதிப்புமிக்க ஆவணங்களை ரஷ்யாவுக்கு அனுப்பி வந்தனர். அவர்கள் லேசான தண்டனையுடன் தப்பிப்பதாகப் பலர் கருதினர்.

By admin