பிரித்தானியாவில் லண்டனில் தை மரபுத் திங்கள் நிகழ்வு வெகு சிறப்பாக தற்போது ஆரம்பித்துள்ளது. தமிழ் மீதும் மொழி மீதும் இனம் மீதும் பற்றுக்கொண்ட மக்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இயல் இசை நாடகம் எனமூன்று துறை சார்ந்த நிகழ்ச்சிகள் மாநில அரங்கேறி வருகிறது. இதில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமன்றி சர்வதேச பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.
அவர்கள் தமிழ் மரபுத் திங்களை மதிப்பளித்து அதற்கு வாழ்த்து தெரிவித்து கலந்து கொண்டு வருகின்றனர். ஈழத் தமிழ் மக்களின் பண்பாடு, வரலாறு சார்ந்த பல்வேறு விடயங்களும் உரையாடப்படுவதுடன் காட்சிப்படுத்தப்பட்டும் வருகின்றது.

The post பிரித்தானியாவில் லண்டனில் தை மரபுத் திங்கள் நிகழ்வு ஆரம்பம் appeared first on Vanakkam London.