2
தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டொக்டர்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் கதையின் நாயகியாக நடிக்கும் ‘666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர் ‘ எனும் திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திர தோற்ற பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
கன்னட இயக்குநர் ஹேமந்த் எம். ராவ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர் ‘எனும் திரைப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான டொக்டர் சிவ ராஜ்குமார், டாலி தனஞ்ஜெயா, பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.
அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரண் ராஜ் இசையமைத்திருக்கிறார். 1970 ஆம் ஆண்டு காலகட்டத்திய ரெட்ரோ ஃபேண்டஸி டிராமா ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை வைசாக் ஜெ. பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வைசாக் ஜெ. கௌடா தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கன்னட திரைப்படத்தில் நடித்திருப்பதாலும்….. வழக்கமான நாயகியாக இல்லாமல் அழுத்தமான வேடமேற்றிருப்பதாலும் இவருடைய கதாபாத்திர தோற்ற பார்வைக்கு ரசிகர்களின் ஆதரவு பாரிய அளவில் கிடைத்து வருகிறது.