• Wed. Feb 25th, 2026

24×7 Live News

Apdin News

பிரேம்ஜி அமரன் பிறந்த நாள் – கவனிக்க வைத்த பாடல்கள்

Byadmin

Feb 25, 2026


பிரேம்ஜி அமரன்

பட மூலாதாரம், Premji Amaran

நகைச்சுவை நடிகராக அறியப்படும் பிரேம்ஜி சிறந்த பாடகர் மட்டுமல்ல, இசையமைப்பாளரும் கூட.

இசையமைப்பாளர் இளையராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பல திரைப்படங்களில் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இன்று (பிப்ரவரி 25) அவருக்கு பிறந்தநாள். நீங்கள் பாடிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்று அவரிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்ட போது உற்சாகமாக பகிர்ந்து கொண்டார்.

யுவன்சங்கர் ராஜா இசையமைப்பாளரான பின் அவர் இசையில் பல பாடல்கள் பாடியிருக்கிறேன். ஏ.ஆர்.ரகுமான், அனிருத் தவிர, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், இமான், மணிசர்மா, தேவிஸ்ரீபிரசாத் உட்பட பல இசையமைப்பாளர்களிடம் பாடிய அனுபவம் இருக்கிறது. என தனது நினைவலைகளை பகிரத் தொடங்கினார். இனி அவரது வார்த்தைகளில் அந்த அனுபவங்கள் குறித்து கேட்கலாம்.

முதலில் பாடிய பாடல்

இதுவரை 15 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். 25க்கும் அதிகமான பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் பாடியிருக்கிறேன். பெரியப்பா இளையராஜா இசையில் சில ‘டிராக்’ பாடியிருக்கிறேன். அப்பா கங்கை அமரன் இசையமைத்த ‘இனி ஒரு சுதந்திரம்’ படத்தில் ‘பள்ளிக்கூடம் போகாம’ என்ற பாடலை சின்ன வயதில் பாடியிருக்கிறேன். அந்த பாடலை அப்பாவே எழுதியிருந்தார். 1987-ல் அந்த படம் வந்தது, சிவகுமார், நளினி நடித்து இருந்தார்கள். பிரேம் கங்கைஅமரன் என என் பெயரை போடுவார்கள்.

அம்பானி பரம்பர (மங்கத்தா)

நான் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும் , எத்தனை படங்களில் நடித்து இருந்தாலும் இன்றைக்கும் என்னை பார்ப்பவர்கள் ‘மச்சி ஓபன் த பாட்டில்’ என்கிறார்கள். அதற்கு காரணம் அந்த பாடல், அது அடைந்த வெற்றி. வாலி வரிகளை எழுத, யுவன்சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

By admin