7
’அகவொளி ராஜா’ நினைவு நூல் வெளியீட்டில் மேனாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன்
எங்கள் புலத்து .உளவியல் கல்வியை அறிமுகம் செய்த, உளவளத் துணையை மேம்படுத்திய முன்னோடிகளில் குறிப்பிடத் தக்கவராக பெருமை பேறும்அருட்தந்தை S.J இராஜநாயகம் அவ்ர்கள் ஓராண்டு நினைவுகளை மீட்டும் முகமாக கடந்த திங்கள் காலையில் அகவொளி நிலையத்தில்’அகவொளி ராஜா’ நினைவு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. அகவொளி நிலைய இயக்குநர்தலைமையில் நிகழ்ந்த இவ்வைபவத்தின் பிரதம விருந்தினராக அருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப் பிரகாசம் ஆண்டகை கலந்து முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார் .
மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் நூலை வெளியிட்டு உரையாற்றினார்.
பிறர் வலியை தன் வலியாக உணர்ந்த பேராளுமையாக இராஜ நாயகம் அடிகளாரின் பணி மேன்மைகளை தன் வெளியீட்டுரையில் விதந்து ரைத்த பேராசிரியர் , குடும்ப உளவியலின் முக்கியத்துவத்தினை அக வொளி குடும்ப நல நிலையத்தின் வழியாக எங்கள் பண்பாட்டில் நிலை நாட்டிய பெருமையும் அவரைச் சார்ந்து என்றால் மிகையில்லை. குடும்பம் ஒரு கோயில்; குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என கொண்டாகும் சமூகத்தில் சரியான புந்துணர்வின்மையினால் இன்று நிகழ்கின்ற உடைவுகள் ,பிரிவுகள் அதிகமாகும் .
இத்தகைய ஒரு நிலைமையை தீர்க்கதரிசனத் துடன் உணர்ந்த அருட்தந்தை S.J இராஜ நாயகம் அவர்கள் சொல்லும் செயலும்மிகப்பயனான விளைவுகளை எமதாக் கின.அவரோடு இணைந்து கற்பிக்கவும் கற்கவும் கிடைத்த பாக்கியம் பெரியது என்றார்.
மேலும் சமூகத்தின் நீண்டகால எதிர்பார்ப்பான தமிழில் சமூகவியல் சிறப்புக் கலையை ஆரம்பித்து கற்பிக்கும் பெரும் பேறு எனதான வேளை உளவியல்,சமூக உளவியல் கற்கை நெறிகளை வளப்படுத்தி கைகொ டுத்த அவர் பணி மறக்கமுடியாதது .
அந் நாட்களில் ’நான்’ சஞ்சிகையில் அனேகமாக எனது கட்டுரையும் அவ ரது கட்டுரையும் பக்கம் பக்கமாக பிரசுரமான நினைவுகளில் நெஞ்சு கனக்கின்றது ;அவர் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் சமூகத்தின் சிந்தனை விழிப்புக்கான கருவூலங்கள் என்றால் மிகையில்லை .
’ குடும்பவாழ்வில் இணங்கிப்போதல் ’ என்ற தலைப்பிலான ஒரு கட்டுரை; அதன் நிறைவுப்பகுதியைப் படித்ததும் அவரைத் தேடிப் பாராட்டிய நினைவுகள் இன்னமும் நெஞ்சிலே பசுமையாய் உள்ளது. யந்திரப் பாங்கான உளவியல் சிந்தனையாக அல்லாமல் பண்பாட்டு சூழமைவின் பிரதிபலிப்பானது அவர் தனித்துவம் .
’குடும்பவாழ்வில் இணங்கிப்போதல் என்பதன் பெயரால் ஆண்
ஆதிக்க சமுதாயத்தில் பெண்கள் ஆண்களுக்கு இணங்கிப்
போதல் வேண்டுமென்பது ஆரோக்கியமானதல்ல ;தவறானது . என தெளிவுற உரைத்தவர் இராஜநாயகம் அடிகளார்.
கட்டுரைகள்,காலப் பதிவுகளாகவும் கருத்து சிந்தனைக்களங்களாவும் அவர் எமக்களித்த நூல்களும் கவனத்துக்குரியன என்பேன்.சமூகத்தொடர்பாடல் .வன்முறை யற்ற தொடர்பாடல் அவரது சிறப்பு ஆர்வ- அனுபவப்பரப்பாக விளங்கி யமையும் குறிப்பிடத்தக்கது. சமூகத் தொடர்பியலின் இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கியஅடிகளாரின் வாழ்வியல் இலக்குகளை அவர் வழியில் வருங்கால சந்ததியினரிடம் தருதலே அவருக்கு உவப்பான அஞ்சலியாகும் என்றார்.