0
பிள்ளைகளை பிரம்பால் அடிப்படை காட்டிலும் கடுமையான வார்த்தைகளால் பேசுவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்.ஒருசில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பிள்ளைகளை ‘முட்டாள்’ என்று சாடுகிறார்கள். இவ்வாறான நிலைமை மாற வேண்டும். நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் சட்டங்களை இயற்றுவோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாடசாலை கல்வியில் இருந்து விலகும் மாணவர்களின் எதிர்காலம் திசைமாறி செல்கிறது. அவ்வாறானவர்களில் பெரும்பாலானோர் பாதாள குழு உறுப்பினர் கெஹல்பத்தரே பத்ம போன்று சமூகத்துக்கு எதிரானவர்களாக மாறி விடுகிறார்கள். பிள்ளைகளை உடலியல் ரீதியில் தண்டிப்பது முறையற்றது.
ஒருசில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பிள்ளைகளை ‘முட்டாள்’ என்று கடுமையாக விமர்சிக்கும் நிலை காணப்படுகிறது. உனக்கு கணிதம் பாடம் எப்போதும் வராது என்று மாணவர்களை திட்டும் போது அவர்கள் உளவியல் ரீதியில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பாடசாலை வகுப்பறையில் பின்வரிசையில் இருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதாகவே அமையும்.
பிள்ளைகளை பிரம்பால் அடிப்படை காட்டிலும் கடுமையான வார்த்தைகளால் பேசுவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். நாங்களும் கடுமையாக தண்டிக்கப்பட்டே படித்தோம் என்று ஒருசில குறிப்பிடுகிறார்கள். சமூக கட்டமைப்பு மாற்றமடைந்து விட்டது, ஆகவே நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் சட்டங்களை இயற்ற வேண்டும்.
பிள்ளைகள் கடற்கரைக்கு செல்வதாக குறிப்பிடப்படுகிறது சிறந்த புரிதல்களுடன் பிள்ளைகள் கடற்கரைக்கு செல்வதில் என்ன தவறு உள்ளது. கல்வி பொதுதரார உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல பிள்ளைகளுக்கும் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கல்வி அமைச்சராக பிரதமரிடம் குறிப்பிட்டுள்ளேன். பிள்ளைகள் அவர்களின் இளமை காலத்தை சிறந்த முறையில் அனுபவிக்க வேண்டும். அவர்களுக்கான சுதந்திரத்தை சகல கட்டமைப்பிலும் வழங்க வேண்டும் என்றார்.