• Thu. Aug 14th, 2025

24×7 Live News

Apdin News

புகலிட கோரிக்கையாளர்களால் இங்கிலாந்து மக்களுக்கு பாதுகாப்பு இல்லையென குற்றச்சாட்டு!

Byadmin

Aug 14, 2025


புகலிடக் கோரிக்கையாளர்களால் இங்கிலாந்து மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான கெமி பேடனோக் முன்வைத்தார்.

அத்துடன், புகலிடக் கோரிக்கையாளர்களை மிகுந்த செலவுள்ள வீடுகள் மற்றும் ஹொட்டல்களில் தங்க வைப்பதற்கு பதிலாக, முகாம்களில் தங்கவைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

எசெக்ஸிலுள்ள Epping என்னுமிடத்துக்கு வருகை புரிந்த கெமி, புகலிடக் கோரிக்கையாளர்கள் ஹொட்டல்களிலும் வீடுகளிலும் தங்கவைப்பதால் உள்ளூர் மக்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றும் அவர் கூறினார்.

Eppingஇல் புகலிடக் கோரிக்கையாளர்கள் இருவர், 12 வயது இங்கிலாந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமையை அடுத்து இங்கிலாந்து முழுவதும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி : சந்தேகநபர்களின் இனத்தை வெளிப்படுத்துவது குறித்து பரிசீலிக்க பொலிஸாருக்கு உத்தரவு

இந்நிலையிலேயே, கெமி பேடனோக் மேற்படி தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேவேளை, ஆங்கிலக் கால்வாய் வழியாக சிறிய படகுகளில் இங்கிலாந்திற்குள் நுழைந்துள்ளவர்கள் எண்ணிக்கை 50,000ஐ எட்டியுள்ளது.

இதனையடுத்து, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அரசு தவறிவிட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

The post புகலிட கோரிக்கையாளர்களால் இங்கிலாந்து மக்களுக்கு பாதுகாப்பு இல்லையென குற்றச்சாட்டு! appeared first on Vanakkam London.

By admin